பாரிஸ் நகரில் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

வா‌ஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டதால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெறவுள் ளது. வரும் 2020ஆம் ஆண் டின் ஒலிம்பிக் போட்டிகள் ஜப் பானின் தோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதேபோல் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்துவதற்கான போட்டியில் இருந்து புடாபெஸ்ட், ரோம், ஹாம்பர்க் ஆகிய நகரங்கள் விலகிய நிலையில் பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இரு நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி களைவிட, 2028ஆம் ஆண்டில் நிதி ஆதாரம் அதிகம் இருக் கும் என்பதால் 2028ஆம் ஆண்டுப் போட்டிகளை நடத்த லாஸ் ஏஞ்சல்ஸ் முடிவு செய்து உள்ளதாக நெருக்கமான வட் டாரங்கள் கூறுவதாக பிபிசி ஊடகச் செய்தி குறிப்பிட்டு உள்ளது.

Loading...
Load next