சுடச் சுடச் செய்திகள்

‘முதல் இன்னிங்சில் ஓட்டம் எடுப்பது மிக முக்கியம்’

கொழும்பு: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஓட்டங்களைக் குவிப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா. தற்போது இலங்கை அணியின் தேர்வுக்குழுவில் உள்ள இவர், ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். “முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. “மேலும் ஆஷ்லே குணரத்னே காயம் காரணமாக வெளியேறிய தும் எங்களின் துரதிர்ஷ்டமான நேரம். “டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல் வியைச் சந்திக்கக்கூடாது என்றால், இந்திய அணியைப் போல் முதல் இன்னிங்சிலேயே ஓட்டங் களைக் குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். “‌ஷிகர் தவான் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, அவரது பந்தை ‘கேட்ச்’ பிடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டதால், அவர் 191 ஓட்டங்களைக் குவித்து விட்டார்.

“அதுபோல் பாண்டியா நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்த நிலை யில், அவரது விக்கெட்டையும் கை நழுவவிட்டதால் அவரும் 50 ஓட்டங்களை எட்டிவிட்டார். “எனவே, இது போன்ற விஷ யங்களைச் சரி செய்து அணிக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்,” என்றார் அவர். இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான ஒன்றாக இருக்குமா என்று கேட்டதற்கு, கடந்த முறை ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்தப்போகிறோம் என்று எண்ணினோம்.

ஆனால், அவர் களை 3-=0 என வீழ்த்தினோம். “அதுபோல், அடிப்படை ஆட் டம் நன்றாக அமைந்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம்,” என்றும் அவர் சொன்னார். இதற்கிடையே, இலங்கை அணித் தலைவர் சந்திமாலின் உடல்நிலை முன்னேற்றம் அடைந் துள்ளதையடுத்து நாளை கொழும் பில் தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளை யாடுவார் என்று இலங்கை கிரிக் கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காய்ச்சல் காரணமாக சந்திமால் இடம்பெறவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon