சுடச் சுடச் செய்திகள்

கவர்ச்சிப் பாதைக்கு மாறிய கேத்தரின்

கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்களையும் திரையுலகம் வெகு சீக்கிரமாக மாற்றிவிடும்போல் இருக்கிறது. கவர்ச்சி என்றால் தமக்கு அறவே பிடிக்காது என்று திட்டவட்டமாகக் கூறிவந்த இளம் நாயகி கேத்தரின் திரேசாவும் தற்போது இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ‘மெட்ராஸ்’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், ஆர்யாவுடன் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கிலும் வாய்ப்புகள் தேடி வந்தன. அண்மையில் இவர் நடித்து வெளியான ‘காதம் நந்தா’ தெலுங்குப் படம் நல்ல வசூலைத் தந்துள்ளதாம். கோபிசந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகாவும் மற்றொரு நாயகியாகத் தோன்றியுள்ளார். இந்தப் படத்தில் நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார் கேத்தரின். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த நீச்சல் உடைக் காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் பூரித்துப்போன கேத்தரின், தொடர்ந்து அளவோடு கவர்ச்சி காட்டும் காட்சிகளில் நடிக்க தீர்மானித்திருப்பதாகக் கேள்வி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon