சுடச் சுடச் செய்திகள்

பொது இடங்களில் பைகளைக் கைவிடுவதற்கான தண்டனை மறுஆய்வு

பொது இடங்களில் கவனிப்பின்றி பைகளை விட்டுச் செல்பவர்களுக்கு தண்டனையை அதிகபட்சமாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார். அதிகரித்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறித்த அனைத்து புகார்கள் மீது போலிசார் தொடர்ந்து அதிக கவனத்தைச் செலுத்துவர் என்றும் அவர் சொன்னார்.

எம்ஆர்டி நிலையம் ஒன்றில் ஆளில்லாமல் கைவிடப்பட்ட பையின் உரிமையாளருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச மான $1,000 தண்டனை போதுமானதா என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவெய் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அண்மையில் ஹவ்காங் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் பை ஒன்று கைவிடப்பட்டதால் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அது ரயில் நிலைய செயல்பாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இடையூறு விளைவித்தது. அந்த பையைத் தவறுதலாக விட்டுச் சென்றவருக்கு அதிகபட்ச தண்டனையாக $1,000 அபராதம் விதிப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon