சுடச் சுடச் செய்திகள்

சீன பாரம்பரிய மருத்துவர்களுக்கு கட்டாயத் தொடர் பயிற்சி

சீனப் பாரம்பரிய மருத்துவர்கள் இனி தொடர்ச்சியாக கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். அதற்கான திட்டத்தை சுகாதார அமைச்சு அமல்படுத்த உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் சீன பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை வழங்கி வரும் மருத்துவர்கள், தொடர்ச்சியான பயிற்சிகளின் வழி தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு தொடர் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு டிசிஎம் கல்விப் புள்ளிகள் வழங் கப்படும். அவர்களிடம் குறிப்பிட்ட புள்ளிகள் இருந்தால் மட்டுமே சிகிச்சை யளிப்பதற்கான அங்கீகாரச் சான்றிதழ் அவர்களுக்கு புதுப்பிக்கப்படும்.

இதனை சுகாதார மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் நேற்று தெரிவித்தார். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் சீன பாரம்பரிய மருத்துவத்துறையும் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பாரம்பரிய பட்டக்கல்வி யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அமைச்சர் சீ ஹோங் டாட் இதனைத் தெரிவித்தார். சீனப் பாரம்பரிய மருத்துவர் களுக் கான சட்டம் திருத்தப்பட்ட பின்னர் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எனவே, சீனப் பாரம்பரிய மருத் துவர்கள் தொடர்ச்சியான பயிற்சிக ளைப் பெற்று தங்களைப் புதுப்பித் துக் கொள்வதற்குத் தயா ராக வேண்டும். அப்போதுதான் இந்தத் துறையின் புதிய மேம்பாடு களை நீங்கள் அறிந்துகொண்டு அதற்கேற்ப திறன்பெற்றவர்களாக விளங்க முடியும் என்றார் அமைச்சர் சீ. புதிதாகப் பட்டம் பெற்றவர் களிடம் பேசிய அவர், சீனப் பாரம்பரிய மருத்துவத் துறையை மேம்படுத்த அரசாங்கம் $5 மில்லியன் நிதி உதவி வழங்க விருப்பதையும் அப்போது அறி வித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon