பிரிமியர் லீக் குழுக்களை வரவழைக்க இந்தியா ஆர்வம்

புதுடெல்லி: பிரபல இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி களுக்கு இந்தியாவில் கிட்டதட்ட 150 மில்லியன் தொலைக்காட்சி ரசிகர்கள் உள்ள நிலையில், இக் குழுக்களை இந்தியாவில் விளை யாட செய்வதற்கான முயற்சிகளை அந்நாட்டு விளையாட்டு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, விளையாட்டு அமைச்சின் செயலாளர் இன் சேத்தி சீனிவாஸ் கடந்த மாதம் மேற்கொண்ட தனது லண்டன் பயணத்தின்போது இபிஎல் போட்டிகளின் அனைத் துலக தொடர்பு நிர்வாகி டிம் வின்னைச் சந்தித்து பேசி உள்ளார்.

அப்போது பிரிமியர் லீக் குழுக்கள் பருவத்திற்கு முந்தைய ஜூன், ஜூலை மாதங்களில் இந்தி யாவிற்குப் பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனிவாஸ் கூறினார். “பிரிமியர் லீக் குழுக்கள் பங் கேற்கும் போட்டிகளை ஏற்று நடத் துவதற்குப் பல மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. “போட்டிகளை நடத்துவதில் அரசாங்கம் நேரடியாக ஈடுபடாது என்றாலும் போட்டிகளை ஏற்று நடத்தும் ஆதரவாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவி களையும் அது செய்யும்,” என்றார்.

“இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி களுக்காக மறுசீரமைக்கப் பட்ட ஆறு நகரங்களின் உள் கட்டமைப்பு வசதிகளையே பிரி மியர் லீக் காற்பந்துக் குழுக்கள் விளையாடுவதற்கும் பயன் படுத்திக்கொள்ளலாம்,” என்றார் சீனிவாஸ். இந்தியாவில் காற்பந்து விளை யாட்டை ஊக்குவிக்க இந்த வாய்ப்பு மிகச் சரியான ஒன்று என்றும் அவர் மேலும் கூறினார்.