சுடச் சுடச் செய்திகள்

இந்தியாவில் 4 மாத கிரிக்கெட் திருவிழா

புதுடெல்லி: இந்தியாவோடு மோதுவதற்காக அந்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக் கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத் தின் தொடர், போட்டி அட்ட வணைக்குழு நேற்று கோல்கத்தா வில் கூடியது. இந்தக் குழு இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 அனைத்துலக போட்டிகளில் விளையாடும் என்று தெரிவித்துள்ளது. இந்த நான்கு மாதங்களில் இந்திய மண்ணில் வந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் மூன்று டெஸ்ட் போட்டி கள், 11 ஒருநாள் போட்டிகள், 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. மற்ற நான்கு போட்டி கள் பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கோல்கத்தாவில் நடைபெறுகின்றன. நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடு கிறது இந்தியா. இலங்கைக்கு எதிராக நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டி களில் அது விளையாடுகிறது. இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon