பார்சிலோனா குழுவிலிருந்து வெளியேறுகிறார் நெய்மார்

மட்ரிட்: பார்சிலோனாவின் நட் சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மார், தான் குழுவில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறி, தான் அவர் பாரிஸ் செல்வதாகவும் தனது சக வீரர்களிடம் கூறியுள் ளார். பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவிற்குச் செல்வது குறித்து ஆலோசிக்க தனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்க வேண்டாம் என்ற பார்சிலோனா நிர்வாகி எர்னஸ்டோ வல்வெர்டே, அவர் தனது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அனுமதி அளித்துள்ளார். இதை பார்சிலோனா குழு தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.

 

இதுபற்றி கருத்துரைக்க பிஎஸ்ஜி குழு மறுத்துள்ள நிலை யில், நெய்மார் எந்தக் குழுவிற்கு செல்கிறார் என்பது பற்றிய உறுதி யான தகவல் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பார்சிலோனாவிற்காக விளையாடி வந்தார் நெய்மார். கடந்த 2013ஆம் ஆண்டு பிரேசில் குழுவான சாண்டோசில் இருந்து சுமார் 48.6 மில்லியன் பவுண்டுக்கு பார்சி லோனா நெய்மாரை வாங்கியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பார்சிலோனா குழுவிற்காக இணைந்து விளையாடிய நட்சத்திர வீரர்களான மெஸ்சி, சுவரெஸ், நெய்மார் ஆகிய மூவரும் தாங்கள் கலந்துகொண்ட 299 போட்டிகளில் 250 கோல்களைப் புகுத்தியுள்ளனர். படம்: ஏஎஃப்பி