மின் மிதிவண்டிகளை பதிவு செய்வது அவசியம்

மின்சக்தி உதவியுடன் இயங்கும் சைக்கிள்களை இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பதிவு செய்ய வேண்டும் என்று நிலப்போக்கு வரத்து ஆணையம் கூறியுள்ளது. வடிவமைப்பில் வழக்கமான மிதிவண்டிகளைப் போல தோற்ற மளிக்கும் இவ்வகை வண்டி களுக்கு மின்சக்தியில் இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இத்தகைய சைக்கிள்களை பயன்படுத்துபவர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையம் காலக்கெடு விதித் துள்ளது. முன்னதாக நிலப்போக்கு வரத்து ஆணையத்தின் ஆரஞ்சு நிற முத்திரை பெற்ற வண்டிகள் காலக்கெடுவை தாண்டியும் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்த கடும் விதிமுறைகளின் கீழ் மின் மிதிவண்டிகளுக்கு ஆரஞ்சு முத் திரை வழங்கப்பட்டது. பொறுப்பற்ற ஓட்டுநர்களையும் விதிமுறைகளுக்கு மாறாக வடிவமைக்கப்படும் மின் மிதி வண்டிகளைக் கட்டுப்படுத்தவும் பாதசாரிகளைப் பாதுகாக்கவும் பதிவு முறை உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. மின் மிதி வண்டிகளைப் பதிவு செய்ய விரும்புவோருக்கு குறைந்தபட்சம் 16 வயது ஆகி யிருக்க வேண்டும். அதோடு மின் மிதி வண்டிகள் அங்கீகரிக்கப் பட்டு ஆணையத்தின் தகுதியான முத்திரையைப் பெற்றிருப்பது அவசியம்.

மேலும் மின் மிதி வண்டிகளுக்கு முத்திரை பெறாத வர்கள் சோதனை, அங்கீகாரம், முத்திரைப் பெறுவதற்காக அங்கீ கரிக்கப்பட்ட சோதனைக் கூடங் களுக்கு அனுப்பி வைக்கப்படு வார்கள். அதே சமயத்தில் தற்போதைய தொழில்நுட்ப விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் மின்சக்தி மோட் டார் மிதிவண்டிகளுக்கு மட்டுமே முத்திரை வழங்கப்படும். முத்திரைப்பெற்ற மின் மிதி வண்டிகளை அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களிலும் பதிவு செய்யலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.

மின்சக்தி உதவியுடன் இயங்கும் சைக்கிள்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் பதிவு தொடங்குகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்