சண்முகம்: ஒற்றுமை உணர்வே சிங்கப்பூருக்கு உதவியது

உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான கா. சண்முகம், சிங்கப்பூரின் வெற்றிக்கு ஒற்றுமை உணர்வு உதவியிருப்பதாகத் தெரி வித்துள்ளார். உள்துறை அமைச்சின் தேசிய நாள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், விருது பெரும் அனைவரும் இந்த ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். “மற்றவர்களுக்காக தங்க ளுடைய நேரத்தையும் திறனையும் ஆற்றலையும் அவர்கள் பயன் படுத்தியுள்ளனர். “ஒரு சிலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்துறைக் குழுவின் தொண்டூழியர்களாகச் செயல்பட்டு உள்ளனர். மற்றும் சிலர் முன்பின் அறிமுகமில்லாதவர்களின் உயி ரைக் காப்பாற்றியுள்ளனர்.

அக்கம் பக்கக் குடியிருப்புப் பகுதிகளில் குற்றச்செயல்கள் இல்லாமல் செய் துள்ளனர்,” என்று அமைச்சர் சொன்னார். உள்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற உள்துறைக் குழுவின் தேசிய நாள் பற்றுறுதி நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், உள்துறை இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர். சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர்களை அங்கீகரிக் கும் வகையில் நேற்று 170க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தொண் டூழியர்கள், பொது மனப்பான்மை யுடன் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களில் காவல் துறை ஆய்வாளர் திரு கோ டெக் ஹெங்கும் ஒருவர்.

அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon