சுடச் சுடச் செய்திகள்

மீண்டும் ‘கூவத்தூர் நாடகம்’: அதிமுகவில் பெரும் பரபரப்பு

சென்னை: வரும் 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளதால், அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப் படலாம் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக இரண்டாக உடைந்தது. அச் சமயம் கட்சி எம்எல்ஏக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க திட்ட மிட்ட சசிகலா தரப்பு, அவர்கள் அனைவரையும் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்து நினைத்ததை சாதித் தது.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சசிகலா, தினகரனுக்கு எதிராக திரும்பி உள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஒன்றுதிரட்டி கூவத் தூரில் தங்க வைத்து தனது பலத்தை நிரூபிக்க தினகரன் திட்டமிட்டிருப்ப தாகக் கூறப்படுவதால் முதல்வர் தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இதனால் இரு அணிகளின் ஆத ரவு எம்எல்ஏக்களும் தீவிர கண்கா ணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட் டிருப்பதாக அதிமுக வட்டாரத் தகவல் கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தங்களது நிபந்தனைகளை முழுமையாக ஏற்றால் மட்டுமே அதிமுகவின் இரு அணிகள் இணைவது சாத்தியமாகும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மா அணி அமைப்பு ரீதியாக வலுவான அணி என்றும் தொண்டர்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கே அதிகம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon