சுடச் சுடச் செய்திகள்

சான்றிதழ் தர மறுத்த தணிக்கை குழு: குமுறும் இயக்குநர்

‘திலகர்’ படத்தில் நடித்த துருவா நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இதில் அஞ்சனா, ஐஸ்வர்யா தத்தா என இரு புதுமுகங்கள் கதாநாயகி களாக அறிமுகமாகி உள்ளனர். இப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் முழுமை அடைந்துள்ள நிலையில், அண்மையில் இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு திரையிட்டுள்ளனர். இறுதியில் எந்தச் சான்றிதழும் தராமல் புறக்கணித்து விட்டதாம் தணிக்கைக் குழு.

இது பெண்களுக்கான, சிறுவர்க ளுக்கான நல்ல விழிப்புணர்வுப் படம் என்கிறார் இயக்குநர் ராகேஷ். “இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது குற்றச்செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங் கள் நிறைய நடக்கின்றன. இவ்வாறு சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங் களை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கி உள்ளோம். “நாள்தோறும் செய்தித்தாள், சமூக வலைத்தளம், தொலைக்காட்சி மூலம் பல குற்றங்களை அறிகிறோம். அதன் மூலம் விழிப்புணர்வையும் பெறுகிறோம். ஆனால் இது போன்றவற்றை எடுத்துச் சொல்லும் நல்ல படங்களை தணிக்கைக் குழுவினர் கண்டு கொள்வதில்லை.

“இப்படத்தில் சமூக விரோத சம்பவங்களைக் காட்டி, அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறேன். அதை ஏற்க முடியாது எனக் கூறி, தணிக்கைக் குழுவினர் எந்த சான்றிதழையும் தராமல் மறுத்தி ருப்பது வேதனையாக உள்ளது. “’யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தரும்படி வாதாடியும் அழுதும் கேட்டுப் பார்த்துவிட்டேன். எனினும் அவர்கள் எந்த சான்றிதழும் தரவில்லை. மறு சீராய்வுக் குழுவை அணுகும்படி கூறி விட்டனர். “சமூகத்துக்கு நல்ல கருத்தைக் கூற வேண்டும் என நினைத்தோம். ஒரு நல்ல படம் இப்படி அலைகழிக்கப்பட வேண்டுமா? அண்மையில் ‘தரமணி’ படத்திற்கும் இதே போல் தான் நடந்தி ருக்கிறது. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகி றது. இதற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும்,” என்று வருத்தத் துடன் கூறியுள்ளார் ராகேஷ்.

 

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தில் துருவா, அஞ்சனா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon