உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்திருக்கும் படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தளபதி பிரபு இயக்கி உள்ளார். “உதயநிதி முதல்முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் படம் இது. அவருக்கு நண்பராக சூரி நடிக்கிறார். “பார்த்திபன் முக்கிய கதா பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார்கள். “இளைஞர்கள் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்லாமல் தனது ஊரிலேயே அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியமான, காலத்துக்கு ஏற்ற கருத்துகளை இப்படத்தில் வலியுறுத்தி உள்ளோம். ’யு’ சான்றிதழ் பெற்றிருக்கி றது. வரும் 11ஆம் இப்படம் வெளியாகிறது,” என்கிறார் தளபதி பிரபு.