வாழ்க்கைத் தொழில் மாற்றம்: தாதியராகும் நிபுணர்கள்

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சேர்வதற்கான திட்டத்தின்கீழ், அதிகமான இடைப்பருவ வாழ்க் கைத் தொழிலர்கள் தாதியாகப் பணிபுரிய பயிற்சி பெறுகின்றனர். சென்ற ஆண்டு, ஆறு வாழ்க் கைத்தொழிலர்கள் சுகாதாரப் பராமரிப்பு வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தில் சேர்ந்து, தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு- மத்தில் பணிபுரியத் தொடங்கினர். கடந்த 2011ம் ஆண்டு ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார். திட்டத்தில் சேர்வதற்கு முன்- பாக, இவர்கள் வாடிக்கையாளர் சேவை, கல்வி, பொறியியல் துறைகளில் பணிபுரிந்தனர். “சீரான வாழ்க்கைத்தொழில் முன்னேற்றப் பாதைகள், மேம்பட்ட பயிற்சி வாய்ப்புகள், போட்டிமிக்க சம்பளங்கள்” ஆகிய காரணங்- களால் இடைப்பருவ வாழ்க்கைத் தொழிலர்கள் தாதிமை துறைக்கு மாறியதாக தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் வியாழக்- கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

2011 முதல், மொத்தம் 17 இடைப்பருவ வாழ்க்கைத் தொழிலர்- கள் பயிற்சியை முடித்துவிட்டு பதிவு செய்யப்பட்ட தாதியராகினர். அவர்களில் ஒருவர் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழும பலதுறை மருந்தகத்தில் தாதியாகப் பணியாற்றும் 33 வயது குமாரி ரேச்சல் வூ. இவர் நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரியில் தாதிமை துறையில் பட்டயக் கல்வியை முடித்தபிறகு இவ்வாண்டு ஜூலை மாதம் தாதியாகப் பணியாற்றத் தொடங்கினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்