வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் குறைந்தன

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறு- விற்பனை வீடுகளின் விலைகள் ஜூலை மாதத்தில் அதற்கு முந்திய மாதத்துடன் ஒப்பிட 0.6 விழுக்காடு குறைந்துள்ளது. சிங்கப்பூர் சொத்துச் சந்தை பரிவர்த்தனையின் வீவக மறுவிற்- பனைகளுக்கான சொத்து விலை குறியீட்டின்படி, ஆண்டுக் காண்டு அடிப்படையில் 2016 ஜூலை மாதம் முதல் விலைகள் 1.6 விழுக்காடு குறைந்துள்ளன. முதிர்ச்சியடைந்த பேட்டை களில் ஜூலை மாதத்தில் வீவக மறு விற்பனை வீடுகளின் விலைகள் 1.3 விழுக்காடும் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் 0.1 விழுக்காடும் குறைந்தன. எனினும், வீவக மறுவிற்பனை புள்ளிவிவரங்களின்படி மறு- விற்பனை எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சொத்துச் சந்தை பரிவர்த்தனை (எஸ்ஆர்எக்ஸ்) தெரிவித்தது. இந்த சொத்து இணையத் தளத்தின்படி, ஜூலை மாதத்தில் 1,785 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இது ஜூன் மாதம் விற்பனையான 1,753 வீடு- களைவிட அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத் துடன் ஒப்பிட, சென்ற ஜூலை மாதத்தில் மறுவிற்பனை அளவு 12.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2016 ஜூலையில் 1,591 வீடுகள் விற்கப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வீடுகளின் விலைகளைப் பார்க்கையில் அங் மோ கியோவில் நான்கறை வீட்டுக்கு மானியங்கள் தவிர்த்து $451,000 முதல் தொடங்குகிறது. அதேபோல தெம்பனிசில் ஐந்தறை வீட்டின் விலை மானியங்கள் தவிர்த்து $508,000 முதல் தொடங்குகிறது.

20 Nov 2019

பெரிய வீடுகளுக்கு மிதமிஞ்சிய வரவேற்பு

50 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு நேற்று முன்தினம் 11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: சிங்கப்பூர் ராணுவம்

20 Nov 2019

11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் செயலிழந்த வெடிகுண்டு