புதிய அஞ்சல் தலை தொடரில் காலை நேர சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பரபரப் பான காலை நேரக் காட்சிகளை விவரிக் கும் அஞ்சல் தலைகள் நாளை முதல் விற் பனைக்கு வருகின்றன. உள்ளூர் அஞ்சல் தலைகளுக்கான கட் டணங்களிலும் மேலும் 60 காசு, 70 காசு, 90 காசு, $1.30 கட்டணங் களிலும் இவை கிடைக் கும். மொத்தமாக $5.20க்கு வாங்கலாம். பொது மக்களுக் கான வசதிகள் ஒன் றோடொன்று இணைந் திருப்பது எவ்வாறு சமுதாயத்தில் மக்கள் தொடர்பை மேம்படுத்து கிறது என்பதை உணர்த்தும் சிறிய வடிவிலான அஞ்சல் தலை தொகுப்பும் $2க்கு கிடைக்கும். அஞ்சல் நிலையங்களிலும் சிங்கப்பூர் அஞ்சல் தலை அரும் பொருளகத்திலும் shop. singpost.com என்ற சிங்போஸ்ட் இணையத்திலும் அஞ்சல் தலைகளை வாங்கலாம்.

புதிய அஞ்சல் தலைகள். படம்: சிங்போஸ்ட்