‘சொத்துச் சந்தையில் விலைகள் இனி குறையாது’

பலமாதங்களாக இறங்கிவந்த சொத்துச் சந்தை விலைகள் அடி மட்டத்தை எட்டிவிட்டது என்று சிங்கப்பூரின் ஆகப்பெரிய சொத்து மேம்பாட்டாளரான கேபிடல்லேண்ட் தலைமை நிர்வாக அதிகாரி லிப் மிங் யான் தெரிவித்துள்ளார். ஹாங்காங், லண்டன், ஆஸ்திரேலிய நகரங்களைவிட முதலீட்டாளர்கள் சிங்கப் பூரையே விரும்புகின்றனர் என்று கூறினார், அந்த நிறுவனத்தின் தலைவருமான திரு லிம். புளூம்பர்க் தொலைக் காட்- சிக்கு அளித்த பேட்டியில், பரி வர்த்தனைகள் அதிக அளவில் இடம் பெறுவதற்கும் விலை- குறைவது மெதுவடைந் திருப் -பதற்கும் அதிக பணப்புழக்கமே காரணம் என்றார் அவர்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அடிப்படைக் குறியீடுகளில் ஒட்டு மொத்த வளர்ச்சி ஏற்பட வேண்- டும் என திரு லிம் குறிப்பிட்டார். சொத்து விலைகள் சாதனை அளவுக்கு உயர்ந்துகொண்டே இருக்கும் ஹாங்காங்குடன் ஒப்- பிடும்போது எக்கச்சக்க விலை யேற்றம் கண்டிருந்த சொத்துச் சந்தையைத் தணிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சாதனை அளவாக 15வது காலாண்டாக வீட்டு விலைகள் இறக்கம் கண்டுள்ளன.

Loading...
Load next