தமிழக விளையாட்டாளர்கள் மூவருக்கு அர்ஜுனா விருது

புதுடெல்லி: உடற்குறையுள்ளோ ருக்கான பாராலிம்பிக் போட்டி களில் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் வென்று தந்த தமிழகத் தின் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப் பரிந் துரைக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பாராலிம்பிக் போட்டி களில் உயரம் தாண்டுதல் போட்டி யில் பங்கேற்ற சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த 22 வயதான மாரியப்பன், 1.89 மீ. தாண்டி தங்கத்தைத் தனதாக்கினார். அவருடன், 26 வயது ஓட்டப் பந்தய வீரர் ஆரோக்கிய ராஜீவ், மேசைப்பந்து வீரர் அந்தோணி அமல்ராஜ், 31, ஆகியோரின் பெயர்களும் அர்ஜுனா விருதுக் குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

திருச்சியைச் சேர்ந்தவரான ராஜீவ், அண்மையில் ஒடிசாவில் நடந்த ஆசிய திடல்தட வெற்றி யாளர்கள் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் தங்க மும் 400 மீ. ஓட்டத்தில் வெள்ளி யும் வென்றிருந்தார். அமல்ராஜ் 2014 காமன்வெல்த் போட்டிகளில் இரட்டையர் மேசைப் பந்தில் வெள்ளியைக் கைப்பற்றி இருந்தார். கிரிக்கெட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா, அண்மையில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட் டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதி ரான அரையிறுதியில் 171 ஓட்டங் களை விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட மேலும் 14 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி மிதாலி ராஜ் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பாராலிம்பிக்கில் ஈட்டி எறி தலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜரியா, ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆகியோர் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப் பட்டுள்ளனர். இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உடற்குறை உள்ள முதல் விளையாட்டாளர் ஜஜரியா என்பது குறிப்பிடத் தக்கது.

மாரியப்பன் தங்கவேலு, 22 (இடது), ஆரோக்கிய ராஜீவ், 26 (வலது மேல்), அந்தோணி அமல்ராஜ், 31, எனத் தமிழகத்திலிருந்து மூவர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். படங்கள்: ஊடகம்