50வது போட்டியில் அசத்தல்

கொழும்பு: அனைத்துலக அளவில் 50வது போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் சேத்தேஸ்வர் புஜாரா, அதைத் தமது வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக அமைத்துக்கொண்டார். இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று புஜாரா சதம் விளாச, இந்தியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங் களை எடுத்திருந்தது. முதல் போட்டியிலும் சதம் விளாசிய புஜாராவுக்கு, இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது சதம் இது.

ஒட்டுமொத்தமாக, 13வது சதம். மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது. சொந்த மண்ணில் முன்னி லையை இழந்ததால் இந்தப் போட்டியில் வென்று தொடரைச் சமன்செய்யும் முனைப்பில் இருக் கும் இலங்கை அணி மூன்று மாற்றங்களைச் செய்தது. முழுமையாக உடல்நிலை தேறிய தினேஷ் சந்திமால் அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனஞ்சய டி சில்வா, புஷ்பகுமார ஆகியோருக்கும் அணியில் வாய்ப்புக் கிட்டியது. இந்திய அணியில் தொடக்க வீரர் அபினவ் முகுந்துக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் இடம்பெற்றார்.

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா. படம்: ஏஎஃப்பி