போல்ட்டுக்கு சவால் விடுத்த வீரர் விலகல்

லண்டன்: இன்று தொடங்க இருக்கும் உலகத் திடல்தட வெற்றியாளர்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் ஓட்டப் பந்தய வீரரான கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸே, 22. இப்போட்டிகளுடன் ஓய்வுபெற இருக்கும் உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட், உலக வெற்றியாளர்கள் போட்டிகளில் தொடர்ந்து 4வது முறையாக 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார். அவரது அந்த முயற்சிக்கு டி கிராஸேவும் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லினும் கடும் சவாலாக இருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தசைநார் காயத்தால் போட்டியைவிட்டு விலகினார் டி கிராஸே. “விளையாட்டைப் பொறுத்த வரை காயம் என்பது சகஜம்தான். ஆனால், இந்தப் போட்டியிலிருந்து விலக நேரிட்டதுதான் வருத்தம் தருகிறது,” என்றார் அவர். ரியோ ஒலிம்பிக்கில் 200 மீ. ஓட்டத்தில் வெள்ளியையும் 100 மீ., 4x100 மீ. பந்தயங்களில் வெண்கலத்தையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon