ஊதியப் பிரச்சினையில் சுமுக உடன்பாடு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுடன் நிலவி வந்த ஊதியப் பிரச்சினையில் உடன்பாடு எட்டப் பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக் கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆஸி. கிரிக்கெட் சங்கத்திற்கும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பில் ஒப்பந்தம் போடப்படும். அந்த வகையில், கடைசியாகக் கையெழுத்தான ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. முன்னதாக, ஊதிய உயர்வுடன் கூடிய அடுத்த ஐந்தாண்டுகளுக் கான ஒப்பந்தத்தை ஆஸி. கிரிக் கெட் சங்கம் கடந்த மார்ச் மாதத் தில் முன்வைத்தது. ஆனால், முன்னர் இருந்ததைப் போல கிரிக்கெட் சங்கத்திற்குக் கிடைக் கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை வீரர்களுக்கு அளிக்க முடியாது என கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி