தேசிய நாள் அணிவகுப்பின்போது கூடுதல் பாதுகாப்பு

வாகனத் தாக்குதலிலிருந்து பாது காப்பளிக்கும் பெரிய கான்கிரீட் பாளங்கள், இதர கடுமையான பாது காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய நாள் அணிவகுப்பின்போது மரினா பே வட்டாரத்தில் அதிக மான பகுதிகளுக்கு விரிவுபடுத்தப் படும். வாணவேடிக்கையைக் காண மக்கள் கூட்டமாகத் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இடங்கள் அதில் உள்ளடங்கும். மரினா பே சேண்ட்ஸ் நீர்முகப்பு, மரினா பே புரோமொன்டரி, ஃபுல்லர்ட்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள இடம் போன்றவை அவற்றுள் அடங்கும். இதற்குமுன், அணிவகுப்பு நடைபெறும் மரினா பே மிதக்கும் மேடைக்கு அருகில் மட்டுமே கடுமையான நடவடிக்கைகள் காணப்பட்டன.

மற்ற பகுதிகளில், பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு சம்பவங்களுக்கு எதிராகப் பாது காக்க காவல்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். உலகெங்கிலும் பல்வேறு இடங் களில் வாகனத் தாக்குதல்கள் நடைபெறுவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் காவல் துறையின் முக்கிய பாதுகாப்பு நிகழ்வுகள் பிரிவின் துணை இயக் குநர் கண்காணிப்பாளர் டே வீ லி கூறினார். சென்ற ஆண்டு நீஸ் நகரிலும் இவ்வாண்டு லண்டனி லும் நிகழ்ந்த தாக்குதல்களை அவர் சுட்டிக்காட்டினார். முன்பு, வெடிபொருட்கள் ஏற்றப் பட்ட அனுமதியற்ற வாகனங் களுக்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்வதில் காவல்துறையினர் கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon