சுடச் சுடச் செய்திகள்

தூதஞ்சல் பணி செய்வது குறித்து விதிமுறை மாறலாம்

டாக்சிகளையும் தனியார் வாடகை கார்களையும் தூதஞ்சல் பணி களுக்குப் பயன்படுத்த முடியாது என்று அறிவித்திருந்த நிலப் போக்குவரத்து ஆணையம், இதுகுறித்து தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என்று தெரிவித் துள்ளது. “அண்மைய போக்குகளை நிலப் போக்குவரத்து ஆணையம் கண்காணித்து விதிமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டுமா என்பது குறித்து ஆராயும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையத்தின் செய்தித்தொடர் பாளர் நேற்று தெரிவித்தார்.

டாக்சிகளைத் தூதஞ்சல் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மாற்றவேண்டும் என்று தேசிய டாக்சி சங்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து விதிமுறை மாறக்கூடும் என்று ஆணையம் தெரிவித் துள்ளது. டாக்சிகளைத் தூதஞ்சல் பணி களுக்குப் பயன்படுத்தினாலும் பொதுமக்களுக்குத் தேவையான டாக்சிகள் இருக்கும் என்று தேசிய டாக்சி சங்கத்தின் ஆலோசகர் ஆங் ஹின் கீ கூறினார்.

“உச்சவேளையற்ற நேரங்களில் தேவைக்கு அதிகமான டாக்சிகள் சாலைகளில் இருக்கின்றன. டாக்சிகளைத் தூதஞ்சல் பணி களுக்குப் பயன்படுத்த அனுமதித் தால் பயணிகள் யாருமின்றி காலியாகச் செல்லும் டாக்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்,” என்று திரு ஆங் தெரிவித்தார். கட்டணமற்ற வேலைகளால் டாக்சி, தனியார் வாடகை கார்கள் ஆகியவற்றின் ஓட்டுநர்களுடைய கவனம் சிதறக்கூடாது என்பதற் காக அவர்கள் அத்தகைய பணி களில் ஈடுபடக்கூடாது என்று ஆணையம் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon