சுடச் சுடச் செய்திகள்

பரிசளித்து அசத்திய விஜய்

வழக்கம்போல் தன் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடன் பணியாற்றும் படக்குழுவினருக்கு படப்பிடிப்பு முடிக்கும் தறுவாயில் ஏதேனும் பரிசளித்து வருகிறார் விஜய். தங்க நாணயம், மோதிரம், சங்கிலி என ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருள் மாறும். தற்போது ‘மெர்சல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கடந்த இரு தினங்களுக்கு முன் னர் இப்படக்குழுவினரைச் சந்தித்துள்ளார். அப்போது அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினாராம். இது குறித்து தகவலறிந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள். விஜய்யிடம் இருந்து இப்படி ஒரு திடீர் பரிசை எதிர்பார்க்கவே இல்லை என்றும் அவரது அன்பு தங்களை வெகுவாக நெகிழ வைத்துள்ளது என்றும் பரிசு பெற்ற படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ‘மெர்சல்’ படம் மிகச் சிறப்பாக உருவாகி இருப்பதாக அதன் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் ‘பாகுபலி’ படத்திற்கு கதை எழுதியவர்.

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள உணர்வுபூர்வமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்றும் சில காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் கைதட்டி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். “இயக்குநர் அட்லீயின் இரண்டு படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு கதைக் கான யோசனையுடன் அட்லீ என்னை அணுகி னார். அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்தி ருந்தது. அதை திரைக்கதையாக உருவாக்கி னேன். அப்படித்தான் ‘மெர்சல்’ உருவானது. இது அருமையான படம்,” என்று தெரிவித் துள்ளார் விஜயேந்திர பிரசாத். இந்தப் படத்தில் கிராமத்து இளையர், மருத்துவர் மற்றும் மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய். நித்யா மேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். எதிர்வரும் 20ஆம் தேதி ‘மெர்சல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்துள்ளது படக்குழு. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தங்களுடைய நிறுவனத்தின் நூறாவது தயாரிப்பாக இப்படத்தை சிறப்பாக தயாரித் துள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon