மூன்று நாயகர்களுடன் விஜய் சேதுபதி

இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலையில் அப்படம் குறித்த இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி தவிர, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான், பகத் பாசில் என மேலும் மூன்று நாயகர்கள் பங்கேற்க உள்ளனராம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரிடமும் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவில் அவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு இதில் மிக வித்தியாசமான வேடமாம். அதற்கான பயிற்சியை அவர் துவங்கிவிட்டாராம். இந்தப் படம் குறித்த மணிரத்னம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Loading...
Load next