விவசாயக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்

சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியால் பெரும்பாலான விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வானமும் பொய்த்து விவசாயமும் பொய்த்துப் போனதால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் வறட்சியால், குடும்பத் தலைவன் உயிரை மாய்த்து கொண் டதால் தவிப்பில் உள்ள 125 விவசாயக் குடும்பங்களை நேரில் அழைத்து தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் தனுஷ்.

தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளரான ராஜீவ் காந்தி என்பவர், ‘கொலை விளையும் நிலம்’ என்ற தலைப்பில் விவசாயிகளின் துயரங்களை குறும் படமாக படைத்துள்ளார். அண்மையில் இக்குறும்படத்தைப் பார்வையிட்ட இயக்குநர் சுப்ரமணிய சிவா நெகிழ்ந்து போனாராம். இதையடுத்து இக்குறும்படம் குறித்து தனு‌ஷின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். படத்தைப் பார்த்த தனு‌ஷும் நெக்குருகிப் போனா ராம்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்த அவர், சுப்ரமணிய சிவாவின் உதவியோடு 125 குடும்பங்களைத் தேர்வு செய்து மேற்குறிப்பிட்ட நிதியை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த வேண்டும் என தனு‌ஷின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர் கள் கூறியபோது, வேண்டாம் என மறுத்துவிட்டாராம் அவர். இதனால் தனு‌ஷின் விருப்பப்படி, எந்தவித ஆர்ப்பாட்டமும் விளம்பரமும் இன்றி இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தேறி உள்ளது.

விவசாயக் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வில் தனுஷ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon