கலையரசன், பிரசன்னா இணைந்து நடிக்கும் ‘காலக்கூத்து’

நடிகர்கள் கலையரசன், பிரசன்னா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘காலக்கூத்து’. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். தன்‌ஷிகாவும் சிருஷ்டி டாங்கேவும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. “இந்தப் படம் மிக வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும். படத்தின் கதையைக் கேட்டபோது, எனக்கும் அத்தகைய அனுபவம் ஏற்பட்டது,” என்கிறார் நாயகன் கலையரசன். இவருக்கு இணையான வேடத்தை ஏற்றுள்ளாராம் பிரசன்னா. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’