சுடச் சுடச் செய்திகள்

நீட் தேர்வில் விலக்கு அளிக்க நாராயணசாமி வலியுறுத்தல்

புதுடெல்லி: முதலமைச்சர் நாரா யணசாமி புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து நீட் தேர்வில் புதுவை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக சட்ட ஆலோசகர் களுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். அதையடுத்து அவர், விமான போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவை சந்தித்துப் புதுவையில் வருகிற 16ஆம் தேதி நடக்க உள்ள விமான போக்குவரத்து சேவை தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் மாநிலக் கல்வித் திட்டத் தில் படித்த புதுச்சேரி மாண வர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ‘நீட்’ தேர்வு முறையில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பதுடன் தற்போது மதிப் பெண் அடிப்படையில் மாணவர் களைச் சேர்க்கும் பழைய நடை முறையே நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லி சென்ற முதல மைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல் லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான் குமார் ஆகியோர் ராகுல் காந்தியைச் சந்தித்த பின்னர், அதிபர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்துத் தெரி வித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon