விவசாய உற்பத்தியில் 18 விழுக்காடு சரிவு

புதுடெல்லி: பருவ மழை பொய்த்த தால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில், தமிழகத் தின் விவசாய உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடு கையில், 2016-17ஆம் ஆண்டில் இந்த சரிவானது 18 விழுக்காடாக உள்ளது என மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித் துள்ளார். தமிழக விவசாய உற்பத்தி குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எழுத்து பூர் வமாக எழுப்பிய கேள்விக ளுக்கு அளித்த பதில்களில் அமைச்சர் இத்தகவலைக் குறிப் பிட்டுள்ளார். கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி யுள்ள தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எத்தகைய உதவிகளைச் செய்துள்ளது? என்பது கனிமொழி எழுப்பிய கேள்விகளில் ஒன்றாகும்.

அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அலுவாலியா, மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகிய வற்றில் இருந்து விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவ தாகக் கூறியுள்ளார். "தமிழ் நாட்டில் 18 விழுக்காடு அளவுக்கு பயிர் உற்பத்தி குறைந் துள்ளது. தமிழகம் உள்பட பல் வேறு மாநிலங்களில் பயிர் சாகு படியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. தமிழக விவ சாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து எந்த ஒரு திட்ட மும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை," என்றும் அமைச்சர் அலு வாலியா மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!