தினகரன்: கட்சியை செயல்பட வைப்பது என் பொறுப்பு

பெங்களூரு: தமிழக மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமக்கு அதிமுகவில் 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ள தாகக் கூறினார். கட்சியில் எப்போது யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தாம் செல்லப் போவது உறுதி என்றார். அங்கு செல்லும் நேரம் குறித்து செய்தியாளர்களுக்கு விவரம் தெரிவிக்கப்படும் என் றும், தம்மை யாராலும் தடுக்க இயலாது என்றும் தினகரன் தெரிவித்தார். “கடந்த மூன்று மாதங்களாக அதிமுக செயல்படாமல் இருக்கி றது. கட்சியை செயல்பட வைப்பது என் முதல் கடமை. எனக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கி றது. பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டு அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பேன். “கட்சியில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை முதல்வர் எடப்பாடி அணியினர் உணர வில்லை. தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டிய கடமை எனக்கு உள்ளது,” என்றார் தினகரன்.

முன்னதாக பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா நடராஜனை அவர் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல் வேறு விவகாரங்கள் விவாதிக்கப் பட்டதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. சசிகலா தமது தாயைப் போன்றவர் எனக் குறிப்பிட்ட தினகரன், சிறையில் அவரை நலம் விசாரித்ததாகத் தெரிவித் தார். சிறையில் சசிகலாவிற்கு எந்த வித சலுகையும் வழங்கப்பட வில்லை என்றும், முன்பு அவரை சந்திக்க அரைமணி நேரம் காத்தி ருந்த நிலை மாறி, தற்போது ஒன் றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது என்றும் தினகரன் கூறினார்.

“சசிகலாவிற்கு பழங்கள்தான் கொடுத்தேன். சிறைக்குள் ஐந்து நட்சத்திர வசதிகள் ஏதுமில்லை. சசிகலாவுக்கு சலுகைகள் வழங் கப்பட்டதாக கூறிய ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்,” என்றும் தினகரன் தெரிவித்தார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், அதிமுக அம்மா அணி தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயக்குமாருக்கு மீனவர் அணி செயலாளர் பதவி கொடுத்து அழகுப் பார்த்தவர் சசிகலா. ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத் திற்கு, தினகரன் நிச்சயம் வருவார், 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தினகரனுக்கு உள்ளது எனக் கூறிஉள்ளார். சினிமா வாய்ப்புகள் இல்லாத தால் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழல் கமல்ஹாசனுக்கு உள்ளது எனக் கூறி உள்ளார் நாஞ்சில் சம்பத்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon