துபாய் கட்டடத்தில் தீ

துபாய்: துபாயில் உள்ள உயரமான குடியிருப்புக் கட்ட டத்தில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இது, இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தீ விபத்தாகும். சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில் உயரமான கட்டடத்தில் தீ பரவி, இடிபாடுகள் விழுவதைக் காட்டின. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், குடிமைத் தற்காப்பு ஊழியர்கள், கட்டடத்திலிருந்த குடியிருப்பாளர் களை வெளியேற்றிவிட்டனர் என்றும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினர். உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘டார்ச் டவர்’ கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Loading...
Load next