சுடச் சுடச் செய்திகள்

டிரம்ப்-ரஷ்ய விவகாரத்தில் விசாரணைக் குழு உருவாக்கம்

வா‌ஷிங்டன்: சென்ற ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யா வின் தலையீட்டை விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக் குழுவை சிறப்பு விசாரணை அதி காரி ராபர்ட் முல்லர் அமைத்திருப் பதாக வால்ஸ்திரீட் ஜர்னல் வியாழனன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்படும் சாத்தியம் இருப்ப தாகக் கூறப்படுகிறது. சிறப்பு விசாரணைக் குழு அண்மை வாரங்களில் அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் விசார ணையைத் தொடங்கியதாகப் பெயரிடப்படாத இரு தரப்பினரி டமிருந்து தகவல் கிடைத்ததாகச் செய்தித்தாள் தெரிவித்தது.

தேர்தலைக் குடியரசு கட்சிக்குச் சாதகமாக்க டிரம்ப்பின் தேர்தல் அதிகாரிகள் ரஷ்யாவுடன் ஒருங் கிணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களின் விசாரணை சூடுபிடித்து வருகிறது என்பதை இது காட்டுவதாகச் செய்தித்தாள் குறிப்பிட்டது. சந்திப்பின்போது அல்லது அதற்குப் பிறகு, டிரம்ப் தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய எவராவது, 2016 மார்ச் முதல் கிளின்டன் பிரசாரத்தின் தொடர் பில் சேகரிக்கப்பட்டுவந்த தகவல் களை வெளியிடத் தொடங்குமாறு ரஷ்யர்களைத் தூண்டினார்களா என்பதை முல்லர் விசாரிப்பதாக ஒரு தரப்புத் தெரிவித்தது. அதிபர் டிரம்ப் தற்போது விசாரணையில் இடம்பெறவில்லை என்றாலும், அந்தச் சந்திப்புப் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியுமா அல்லது பிற்பாடு அவரிடம் தெரி விக்கப்பட்டதா என்பதை முல்லரின் விசாரணை உறுதிப்படுத்த முயல் வதாக மற்றொரு தரப்பு தெரி வித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon