மகாதீர்: என்னை மலாய்க்காரர்கள் பயன்படுத்திக்கொண்டனர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியா வின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், சொந்த நலன்களுக்காக மலாய்க்காரர்களும் அம்னோ வும் தம்மைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள் ளார். அம்னோ கட்சிதான் தம் மைத் தேர்ந்தெடுத்ததாகவும் மலாய்க்காரர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக பிரதம ராகவோ அல்லது 22 ஆண்டுகள் அம்னோ தலை வராகவோ எந்தவிதப் பலனும் தாம் அடையவில்லை என்றார் அவர். “அம்னோதான் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. நான் தலைவராக விரும்பவில் லை. அம்னோவில் அப்போது நான் சாதாரண உறுப்பினராக இருந்தேன்,” என்று ‘மலேசிய இன்சைட்’ என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான மகாதீர் கூறினார். “அப்படியே அம்னோவைப் பயன்படுத்தியிருந்தால் தீய காரியங்கள் ஏதாவது செய் திருக்கிறேனா, உண்மையில் மலாய்க்காரர்கள்தான் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர். கோப்புப் படம்