விமானத்துக்கு குறிவைக்க ஐஎஸ் கட்டளை

சிட்னி: விமானத்தைத் தகர்ப்பதற் காக குண்டுகளைத் தயாரிக்கும்படி சந்தேக நபர்களுக்கு மூத்த ஐஎஸ் ஐஎஸ் தளபதி ஒருவர் கட்டளை யிட்ட விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஆஸ்தி ரேலிய போலிசார் நேற்று தெரி வித்தனர். ஜூலை 15ஆம் தேதி அன்று எட்டிஹாட் விமானச் சேவையின் போது வெடிகுண்டைக் கடத்தி உள்ளே கொண்டு வருவதற்கு முயற்சி நடைபெற்றது. ஆனால் பாதுகாப்புச் சோத னையைக் கடப்பதற்கு முன்பாகவே அம்முயற்சியை சந்தேக நபர்கள் கைவிட்டுவிட்டனர் என்று காவல் துறையினர் கூறினர். எட்டிஹாட் விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட தாக இதுவரை இரண்டு சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 3வது நபர் இன்னமும் தேடப் பட்டு வருகிறார். “ஐஎஸ் பயங்கரவாத அமைப் பின் மூத்த உறுப்பினரிடமிருந்து உத்தரவு வந்துள்ளது,” என்று ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை யின் துணை ஆணையர் மைக்கல் ஃபெலன் தெரிவித்தார்.

“துருக்கியிலிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான சாதனங்கள் சரக்கு விமானம் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “அந்தச் சாதனத்தில் வர்த்தக ரீதியில் பயன்படுத்தக்கூடிய இறைச்சி அரைக்கும் இயந்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது,” என்று ஆணையர் கூறினார். இந்நிலையில் காவல்துறை யினரின் கண்டுபிடிப்பு குறித்து எட்டிஹாட் உடனடியாக கருத்து எதுவும் வெளியிடவில்லை. ஆனால் விசாரணையில் உதவி வருவதாக கடந்த வாரம் அது கூறியிருந்தது.

இதற்கிடையே ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் பேசிய பெயர் தெரி விக்க விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்கும் சிட்னியில் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை வெளிநாட்டு உளவுத்துறை இடை மறித்துக் கேட்டுள்ளனர் என்று கூறினர். சிட்னியிலிருந்து வளை குடா நாடுகளுக்குச் சென்ற வர்த்தக விமானத்துக்கும் குறி வைக்கப்பட்டதாக மற்றொரு அமெரிக்க அதிகாரி சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’