பாராட்டு பெற்ற ரகுமான் படம்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘ஒன் ஹார்ட்’ என்ற படத்தை இயக்கி உள்ளது அனைவரும் அறிந்த சங்கதி. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவர்தான் இதில் நடிக்கும் முக்கிய நட்சத்திரம். மேலும், ரகுமான் இசைக்குழுவில் இடம்பெறும் பிற கலைஞர்களுடன் பாடகர்கள் ஹரிஹரன், ஜொனிதா காந்தி ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். ரகுமான் அமெரிக்காவில் நடத்திய 16 இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இப்படம் இருக்குமாம். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் ஏற்கெனவே கனடாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next