கதாநாயகன் தாடையைப் பதம் பார்த்த அரிவாள்

ராஜா நாயகனாகவும் மாளவிகா மேனன் நாயகியாகவும் நடிக்கும் படம் ‘அருவா சண்ட’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆதிராஜன். இவர் ஏற்கெனவே ‘சிலந்தி’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுக மானவர். ‘அருவா சண்ட’யில் வில்ல னாக ‘ஆடுகளம்’ நரேனும் அவரது மருமகனாக சௌந்தர் ராஜாவும் மிரட்ட உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப் பிடிப்பின்போது உண்மையாகவே அனைவரும் மிரளக்கூடிய சம்பவம் நடந்தேறி உள்ளது. அண்மையில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி உள்ளாராம். சண்டைக் காட்சி ஒன்றில் நாயகன் ராஜாவும் சௌந்தர் ராஜாவும் மோதி உள்ள னர்.

பிரபல சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ் மேற்பார்வையில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சௌந்தர் ராஜா தன் கையில் இருந்த அரிவாளை ஆவேசமாக வீச, அது நாயகன் ராஜாவின் தாடையைப் பதம் பார்த்துவிட்டது. அவரது பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட படக் குழுவினர் கடும் அதிர்ச்சிக் குள்ளாகினராம். இதையடுத்து அவருக்கு படப்பிடிப்புத் தளத்திலேயே முத லுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

‘அருவா சண்ட’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாளை (நவம்பர் 22) நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை அடுத்து அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

கமல்ஹாசன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. படங்கள்: ஊடகம்

21 Nov 2019

நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

படப்பிடிப்புத் தளத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி.

21 Nov 2019

விரதம் இருந்து நடிக்கப் போகும் நயன்தாரா