‘50 ஆண்டுகளில் 400 மொழிகள் அழியும் ஆபத்து’

புதுடெல்லி: எதிர்வரும் 50 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இப்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என ஆய்வின் வழி தெரியவந்துள்ளது. “இன்னும் 50 ஆண்டுகளில் குறைந்தது 400 இந்திய மொழிகள் அழிந்துவிடும் அபாயத்தில் உள் ளன,” என்று பீப்பிள்’ஸ் லிங்கு விஸ்டிக் சர்வே ஆப் இந்தியா என்ற அமைப்பின் தலைவர் ஜிஎன் டேவி கூறியுள்ளார். ஏற்கெனவே இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 250 மொழிகள் அழிந்துவிட்டன என் றும் ஆய்வு அறிக்கை குறிப் பிட்டுள்ளது. “இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளில் பாதி மொழி கள் இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் விதவிதமான 780க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசி வரு கின்றனர். “ஒவ்வொரு நேரத்திலும் நமது மொழி நம்மை விட்டு அழிந்து போகும்போது மொழியின் தொடர் புடைய நமது கலாசாரத்தையும் அது அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது,” என்று டேவி மேலும் கூறியுள்ளார்.

பீப்பிள்’ஸ் லிங்குவிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா (பிஎஸ்எல்ஐ) எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: “இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780 மொழிகள் பேசப் பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில் 400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது. “கல்வி அறிவின்மை, பள்ளி செல்லாத காரணத்தால் பழங் குடியின மக்கள் பேசும் மொழிகள் அழியும் ஆபத்து அதிகம் உள் ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 1,000 ஆண்டு பழமையான மைதிலி (பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடி யின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது. “ஒவ்வொரு மொழி அழியும் போதும் அந்த மொழி தொடர் புடைய கலாசாரமும் அழியக்கூடிய வாய்ப்புள்ளது. கடந்த 50 ஆண்டு களில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டன,” என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.