சீனா: எங்களின் பொறுமை இறுதிக் கட்டத்தில் உள்ளது

பெய்ஜிங்: சிக்கிம் விவகாரத்தில் எங்களின் பொறுமை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று சீனப் பாதுகாப்புத்துறை தெரிவித் துள்ளது. சிக்கிம் விவகாரத்தை பொறுத்தவரை சீனா மிகுந்த நல் லெண்ணத்தை காட்டி வருவதாக வும் தங்களின் பொறுமை இறு திக் கட்டத்தில் இருப்பதாகவும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக் கும் வகையில் சீன பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் இது குறித்துக் கூறுகையில், "இந்தப் பிரச்சினை ஏற்பட்டதில் இருந்தே சீனா மிகுந்த நல்லெண்ணத்தை கடைப் பிடித்து தூதரக வாயிலாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா வுடன் பேச்சுவார்த்தையை நாடி யது. சீன ராணுவமும் இருதரப்பு உறவுகள், வட்டார அமைதியை நிலை நாட்டுவதற்காக உச்ச கட்ட பொறுமையைக் காட்டியது. இருந்தபோதிலும் நல்லெண்ணம் தான் முதன்மையான கொள்கை என்ற போதிலும் சீனாவின் பொறு மையானது இறுதி நிலையில் உள்ளது," என்று அவர் தெரி வித்துள்ளார்.

டோக்லாம் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ''டோக்லாம் விவ காரத்தில் சீனாவுடனான உறவு குறித்து ராஜதந்திர வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாம் வலுவான ராணுவத்தை கொண் டுள்ளோம். ஆனால் அதற்காகப் போர் ஒரு தீர்வாகாது. யுத்தம் ஒரு தீர்வாகாது. "ராஜதந்திர ரீதியாக பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் விவேகமானது. இந்த விஷ யத்தில் பொறுமையாக செயல்பட வேண்டும். பொறுமையை இழந்து விட்டால் பெரிய பிரச்சினை ஏற் படும்," என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!