ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் தீ: 7 பேர் காயம்

ஜூரோங் ஈஸ்ட் வீவக வீட்டில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 5 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்கும் கொண்டு செல்லப் பட்டனர். அண்டை வீடுகளில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர். ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32 புளோக் 372ன் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட அந்த தீ விபத்துக் குறித்து காலை 10.18 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட் டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இரண்டு தீயணைப்பு மோட்டர் சைக்கிள்கள், இரண்டு ரெட் ரைனோக்கள், ஒரு தீயணைப்பு வண்டி, ஓர் உதவி வாகனம், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இரண்டாவது மாடியில் ஏற்பட்ட அந்த தீ வேகமாக மற்ற பகுதி களுக்குப் பரவியது. சுமார் 200 பேர் அந்த அடுக்குமாடிக் கட்டடத் திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஜெனல் லீ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். 8.30 மணிக்கு புகையை நுகர முடிந்ததாகவும் 10 மணிக்கு மேல் தீ வேகமாக பரவியதாகவும் குமாரி லீ தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon