உபர்: ஹோண்டா கார்களை பாதித்த தீ அபாயம் சரி செய்யப்பட்டது

உணவக அறிவிப்பில் இருமொழிகள் நீக்கம்: மேற்பார்வையாளரின் தவறு அமெரிக்க தனியார் வாடகை வாகன சேவை நிறுவனமான, உபர் வாங்கிய 1000க்கும் மேலான ஹோண்டா வெஜெல் கார்கள் தீ பற்றும் அபாயம் கொண்டவையாக இருந்ததாக உபர் நிறுவன பேச்சாளர் லே வோங், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் குறைந்தது ஒரு கார் தீ பற்றி கொண்டது என்பதும் அறிக்கையில் தெரியவந்தது. குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்துவிட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று திரு வோங் தெரிவித்தார். ஏப்ரல் 2016 முதல் கார்களை சேவையிலிருந்து அகற்றி குறைபாடு உள்ள பாகங்களை மாற்றியது. இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை சரிசெய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.