சாலை விபத்தில் கார் மீது வேன் ஏறியது

நேற்று காலை 2.10 மணிக்கு பெகோனியா சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் கார் மீது வேன் ஏறியது. இயோ சூ காங் சாலையருகில் இருக்கும் பெகோனியா சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த கருப்பு நிற வேன் ஒன்றை இடித்ததாக நம்பப்படுகிறது. இடித்த வேகத்தில் வேன், பின்னால் நின்றுகொண்டிருந்த கார் மீது ஏறியது. படத்தில் கார் மீது ஏறிய வேன். அந்த வட்டாரத்தில் வசிக்கும் வீட்டுப் பணிப்பெண் கிரேஸ் அன்டலெஸ், 54, நள்ளிரவுக்குப் பின் பெரும் சத்தம் கேட்டதாக கூறினார். ஆனால், வீட்டில் தனியாக இருந்ததால் வெளியே வந்து பார்க்கவில்லை என்றும் காலையில் எழுந்த பின்னரே நடந்தது பற்றி தெரியவந்ததாகவும் கூறினார். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்