குட்கா விற்பனை; சிறையில் 75 வியாபாரிகள்

வேலூர்: ஓசூரில் கள்ளத்தன மாக அரசுப் பேருந்தில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதை யடுத்து, வேலூரில் குட்கா விற்பனை செய்த 75 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பி பகலவன் உத்தர வின் பேரில் ஆம்பூர் டவுன் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி விற்ற நால்வரை போலி சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து மாவட்டம் முழு வதும் குட்கா, பான்பராக், விற் பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரு கின்றனர். வேலூர் வடக்கு போலிசார் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு டீ கடையில் குட்கா விற்பனை செய்த தோட்டப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன், 52 என்பவரை கைது செய்தனர். வேலூர் தெற்கு காவல்துறை யினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் ஊரீசு கல்லூரி பின்புறம் குட்கா, விற்ற அருள் ராஜ், ரமேஷ் என்ற ஆனந்தராஜ் ஆகியோரையும் அவர்கள் கைது செய்தனர்.

இவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழி பாட்டுத் தலங்கள் அருகில் குட்கா, புகையிலைப் பொருட் களை விற்பனை செய்த 75 வியாபாரிகள் கைது செய்யப் பட்டனர். இவர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வியாபாரிகள் 75 பேரும் வேலூர் சிறையில் அடைக் கப்பட்டனர். தொடர்ந்து மாவட்டம் முழு வதும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா, புகையிலை, விற்பனை குறித்து பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.