அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து மனு

புதுடெல்லி: வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கார்த்தி சிதம்பரத்தைத் தேடப்படும் நபராக அறிவித்து விமான நிலையங் களுக்கு உள்துறை அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு பெற்றுத் தந்ததில் மோசடி செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி மீது புகார் எழுந் தது. இதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ, அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து நேரில் முன்னிலை யாகுமாறு அவருக்கு அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்த னர். ஆனால், விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை.

இந்நிலையில் அவர் வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத் துறையும் சிபிஐயும் கேட்டுக்கொண்டன. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தைத் தேடப்படுபவராக அறிவித்து அவர் வெளிநாடு செல்ல முயன்றால் தகவல் தெரிவிக்குமாறு கூறி நாட்டின் அனைத்து விமான நிலையங் களுக்கும் உள்துறை அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அவர் வெளிநாடு செல்ல முயன்றால் அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. தமக்கு எதிரான உள்துறை அமைச்சகத்தின் இந்த நட வடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் கார்த்தி மனுத் தாக்கல் செய் துள்ளார். இந்த மனு வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி (இடக்கோடி) பதவியேற்கயுள்ள தாகக் கூறப்படும் நிலையில், திருப்பதி ஏழுமலையான கோவில் அர்ச்சகர்கள் அவரைச் சந்தித்து ஆசி வழங்கினர். படம்: இணையம்

26 May 2019

ஜெகன்மோகன்: ஆண்டவன் தண்டனை கொடுத்துவிட்டார்

கட்டடத்தின் மாடிகளில் மூண்ட தீயைக் கட்டுப்படுத்த 19 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. படம்: இணையம்

26 May 2019

சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி