மதுரை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து கொழும்பு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுப்பிரமணியன் என்ற பயணியின் பயண சுமையில் இருந்த பொட்டலத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சுப்பிரமணியத்திடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் போதைப் பொருளின் மொத்த மதிப்பு மூன்றரை கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Loading...
Load next