புதிய சவால்களை விரும்பும் நெய்மார்

பாரிஸ்: காற்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 222 மில்லியன் யூரோவுக்கு (S$358 மி.) ஸ்பெயினின் பார்சிலோனா குழுவில் இருந்து பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழுவிற்கு இடம் மாறி இருக்கிறார் பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார், 25. பார்சிலோனாவின் 'மெஸ்ஸி= சுவாரெஸ்=நெய்மார் (எம்எஸ்என்)' தாக்குதல் வரிசை உலகளவில் மிகப் பிரபலம். அம்மூவரும் இணைந்து பார்சிலோனாவிற்காக கடந்த பருவங்களில் கோல் மழை பொழிந்தனர். இந்த நிலையில், அக்குழுவை விட்டு நெய்மார் விலக விரும்பி யதை அறிந்து ஒட்டுமொத்த பார்சிலோனா குழுவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

போதாதற்கு, எவ்வளவு விலை கொடுத்தேனும் நெய்மாரை ஒப்பந்தம் செய்ய பிஎஸ்ஜியும் தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் பிஎஸ்ஜி குழுவுடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார் நெய்மார். பிஎஸ்ஜியில் அவர் ஆண்டு ஒன்றுக்கு 30 மி. யூரோ (S$48 மி.) ஊதியமாகப் பெறுவார் என்று கூறப்படுகிறது. "பிஎஸ்ஜியுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்," என்று நெய்மார் கூறினார். ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சமூக ஊடகப் பக்கம் வழியாக காணொளி மூலம் அறிக்கை வாசித்த நெய்மார், "பார்சிலோனா குழுவும் நகரமும் எப்போதும் என் இதயத்தில் இருக் கும். ஆனாலும், ஒரு விளையாட்டாளராக எனக்குப் புதிய சவால் கள் அவசியம்," என்றார். "பார்சிலோனா குழுவிற்காக விளையாடுவது என்பது சவாலை விட மேலானது. காணொளி விளையாட்டு மூலமாக நட்சத்திர வீரர்களுடன் இணைந்து விளை யாடும் ஒரு குழந்தையின் கனவு அது," என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!