அரிய சாதனைப் பட்டியலில் அஸ்வின்

கொழும்பு: இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண் டாவது முறையாக அறுநூறு ஓட்டங்களைக் கடந்துள்ளது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியின் முதல் இன்னிங் சில் 600 ஓட்டங்களை விளாசிய இந்தியா, நேற்று முன்தினம் தொடங்கிய 2வது போட்டியின் முதல் இன்னிங்சில் ஒன்பது விக் கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களை எடுத்திருந்தபோது 'டிக்ளேர்' செய்தது. புஜாராவும் (133) ரகானேவும் (132) சதம் விளாச, ராகுல் (57), அஸ்வின் (54), சாஹா (67), ஜடேஜா (70*) ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

அஸ்வின் 50 ஓட்டங்களை எடுத்திருந்தபோது டெஸ்ட் போட்டி களில் 2,000 ஓட்டங்களையும் 200 விக்கெட்டுகளையும் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கபில் தேவ், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் அவருக்குமுன் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தனர். அத்துடன், உலக அளவில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியோர் வரிசையில் அஸ்வின் நான்காமிடம் பிடித்தார். தமது 51வது போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இயன் போத்தம் (42), இம்ரான்கான் (50), கபில்தேவ் (50) ஆகியோர் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டியவர்கள். அடுத்து தனது முதல் இன் னிங்சைத் தொடங்கிய இலங்கை இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங் களை எடுத்திருந்தது. தினேஷ் சந்திமாலும் (8*) குஷல் மெண்டிசும் (16*) களத்தில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!