சுடச் சுடச் செய்திகள்

வெல்ல முடியாதவராக விடைபெற விரும்பும் போல்ட்

லண்டன்: உலகத் திடல்தட வெற்றியாளர்கள் போட்டியிலும் வாகை சூடி, வெல்ல முடியாத வீரராக விடைபெற விருப்பம் தெரிவித்துள்ளார் மின்னல் வேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட். ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு தங்கமும் உலக திடல்தட வெற்றி யாளர்கள் போட்டிகளில் 11 தங்க மும் வென்றிருக்கும் போல்ட், இம்முறையும் 100 மீ., 4x100 மீ. பந்தயங்களில் உலக வெற்றி யாளர் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார். இவ்வாண்டில் மூன்று முறை 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்றுள்ள போதும் ஒருமுறை மட்டுமே பத்து வினாடிகளுக்கும் குறை வான நேரத்தில் அந்த தூரத்தைக் கடந்துள்ளார். ஆயினும், “உலக வெற்றி யாளர் போட்டி எனும் பட்சத்தில், வெற்றி எனக்குத்தான் என முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். வெற்றியை அறுவடை செய்ய நான் ஆயத்தமாகிவிட்டதாக என் பயிற்றுவிப்பாளரும் நம்பு கிறார்,” என்று போல்ட் தெரிவித் துள்ளார்.

கடந்த நான்கு உலக வெற்றி யாளர்கள் தான் பங்கேற்ற எட்டு பந்தயங்களில் ஒன்றில் மட்டுமே போல்ட் சொதப்பினார். 2011ல் டேகுவில் நடந்த போட்டிகளின் போது பந்தயத்தைத் தவறாகத் தொடங்கியதால் 100 மீ. இறுதி யிலிருந்து அவர் வெளியேற நேரிட்டது. அமெரிக்கர்களான ஜஸ்டின் காட்லின், கிறிஸ் கோல்மன், சக ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் ஆகியோரும் இன்று போல்ட் உடன் 100 மீ. பந்தயத்தில் பங் கேற்கின்றனர். வரும் 14ஆம் தேதி ஞாயிறு அதிகாலை நடக்கவுள்ள 4x100 மீ. அஞ்சல் ஓட்டமே போல்ட் கலந்துகொள்ளும் இறுதி ஓட்டப் பந்தயமாக இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon