மராவி மக்களுக்கு சிங்கப்பூர் உதவி

சிங்கப்பூர் ஆயுதப் படை, ஃபிலிப்பீன்ஸின் மராவி நகரில் பூசல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரி வித்துள்ளார். சிங்கப்பூர் ஆயுதப் படையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க மும் நன்கொடையாக அளித்துள்ள அத்தியாவசியப் பொருட்களை ஆயுதப் படை பிரிவுகள் தயார் செய்து வருவதாக அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் மராவி நகரிலுள்ள நூறாயிரக்க ணக்கான குடிமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் இன்னும் மராவி நகருக்கு அருகில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் உள்ளனர்.

Loading...
Load next