டெக் கீயில் பெற்றோர்களுக்கு புதிய உதவிக் குழு தொடக்கம்

டெக் கீ வட்டாரத்தில் சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் களுக்கு உதவ புதிய ஆதரவுக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அங் மோ கியோ குழுத்தொகுதி யின் ஒரு பகுதியான டெக் கீயில் வசிக்கும் இளம் பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க மக்கள் கழகம் இந்தக் குழுவை அமைத்து உள்ளது. ‘எம்ப்ரேசிங் பேரண்ட்ஹூட் @ டெக் கீ நெட்வர்க் குருப்’ எனப் படும் பெற்றோருக்கு உதவும் இந்த ஆதரவுக் குழுவுக்கு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று உள்ளது.

பெற்றோர்களுக்கான பயிலரங்குகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன. ஏறக்குறைய 200 குடும்பங் களும் அவற்றின் குழந்தைகளும் பங்கேற்ற கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இந்த ஆதரவுக் குழு தொடங்கப்பட்டது. இயோ சூ காங் சமூக மன்றத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார். டெக் கீயில் கடந்த ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட 400 குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் எட்டு ஜோடி இரட்டைக் குழந் தைகளும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் அடங்கும் என அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ கூறினார்.

குழந்தைகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சியில் ஒன்பது மாத இரட்டைக் குழந்தைகள் ஹேரா (இடது), ஹீர்த்திகா ஆகியோரை தூக்கிக் கொஞ்சும் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்