தொண்டை அழற்சி நோயால் பங்ளாதேஷ் ஊழியர் மரணம்

‘டிஃப்தீரியா’ என்று கூறப்படும் தொண் டை அழற்சி நோய் காரணமாக 21 வயது கட்டுமானத் துறை ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் மாண்டார். இந்த நோய் ஏற்பட்டது குறித்து இம்மாதம் 3ஆம் தேதி சுகாதார அமைச்சுக்கு தெரிவிக் கப்பட்டது. மாண்ட அந்த பங்ளாதேஷ் ஊழியர் யீ‌ஷூன் அவென்யூ 7ல் வசித்தார் என்றும் அவர் ஜூரோங்கிலுள்ள தேபான் கார் டன்ஸ் வட்டாரத்தில் பணிபுரிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 30ஆம் தேதி யன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு கழுத்தில் வீக்கம் உண்டானது. அதையடுத்து இம்மாதம் 1ஆம் தேதியன்று அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனையில் மருத்துவ உதவி நாடினார்.

அவர் உடனே தனிமைப்படுத்தப் பட்டு அதே நாளில் மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் அவர் வெளிநாடு களுக்குச் செல்லவில்லை என்பதா ல் சிங்கப்பூரில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் தெரி வித்தது. கடைசியாக டிஃப்தீரியா நோய் சம்பவம் 1996ஆம் ஆண்டில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள் வதன் மூலம் இந்த நோய் ஏற்படுவ தைத் தடுக்க முடியும். இரண்டு வயதாகும் சிங்கப்பூர் பிள்ளைகளில் 96 முதல் 98 விழுக்காட்டினர் வரை இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon